Natchathira sangamam full show
ஏப்ரல் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சி, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒட்டுமொத்தத் தமிழர்களும் கண்டுகளித்த நிகழ்ச்சி என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் தெறி படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவைத் தாண்டி மக்களை ஈர்த்த இந்நிகழ்ச்சி பற்றிய ஓர் அலசல்.
ஏப்ரல் 17ம் நாள் மிகவும் முக்கியமான நாள் என கார்த்தி ஆரம்பமே நமக்கு எதிர்ப்பார்ப்பை உண்டாக்க பயந்த கோவை சரளாவும், அவரைக் கலாய்த்த மனோபாலாவும் நம்மை ஜாலி மூடிற்குக் கொண்டு வந்தனர்.
“இனி செயலில் செய்யப் போகிறோம்” என ரோகினி கொஞ்சம் சுறுசுறுப்பாக பேச அடுத்து சுஹாசினி, ராதா , விஷால் என பேசி முடித்தபின், ஜாலியாக மைக்கை வாங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார் வடிவேலு. நீங்க இல்லாம நாங்க இல்ல” என நிறுத்திவிட்டு மறுபடியும் நீங்க இல்லாம நாங்க இல்ல, என்றார்... ஏன்னா நாங்க இல்லாம நீங்க இல்லைன்னு சொல்ல முடியாது. உங்கள் ஆதரவுகள் தேவை என நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
”லவ் பேர்ட்ஸ் ...லவ் பேர்ட்ஸ்” பாடல் ஒலிக்க கன்னடத்துப் பைங்கிளி என்ட்ரி என மனம் சொல்லியது...சரி ஒரே நடிகரோட நிறையப் படங்கள்ல நடிச்சீங்களே உங்க கிட்ட கேக்கலையா என்ன நீ அவரு கூடயே நிறை